Dataset Viewer
Auto-converted to Parquet
S.No
int64
1
1.05k
Tamil
stringlengths
13
109
English
stringlengths
16
159
1
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
Having placed the thing on the palm, why lick the hack of the hand
2
அகடவிகடமாய்ப் பேசுகிறான்
He speaks artfully.
3
அகதிக்கு ஆகாயம் துணை
Heaven is the help of the helpless.
4
அகதிக்கு தெய்வமே துணை
God Himself is the help of the helpless.
5
அகதி சொல் அம்பலம் ஏறாது
The word of the destitute does not reach the assembly.
6
அகதி தலையிற் பொழுது விடுகிறது
Light breaks on the head of the destitute.
7
அகதி பெறுவது பெண் பிள்ளை, அதுவும் வெள்ளி பூராடம்
The destitute brings forth a female child, and that. on Friday,under the star Pirddam.
8
அகதியைப் பகுதி கேட்கிறதா?
What! is tribute demanded of the destitute ?
9
அகத்தில் அழகு முகத்தில் தெரியும்
The beauty of the mind appears in the face.
10
அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
Though the Agatti Coronilla grandiflora, brings forth by thousands, its fruit remains ungathered.
11
அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது
Does the thief steal in expectation of being caught ?
12
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி ஓடிப்போறவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா
He who was caught was under the influence of Saturn in the eighth sign, and he who escaped, did so, under the influence of Saturn in the ninth.
13
அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பக்கத்தில் இருந்தால் என்ன கடைப்பக்கத்தில் இருந்தால் என்ன
If he who has the ladle be one’s own servant, what matters it whether one be seated first or last at the feast ?
14
அகம் ஏற சுகம் ஏறும்
As grain becomes cheaper, enjoyment increases.
15
அகம் அழிந்தால் அஞ்சும் மலியும் அகம் குறைந்தால்அஞ்சும் குறையும்
If grain abound, the five also will abound ; if grain be scarce, the five will be so.
16
அகம் அழிந்தால் எல்லாம் மலியும் அகம் குறைந்தால் எல்லாம் குறையும்
If grain aboundsa,l l things abound, if grait he scarce, all things are scarce.
17
அகல இருந்தால் நீள உறவு கிட்ட இருந்தால் முட்டப் பகை
If apart, long friendship, if together, the least touch will provoke hatred,
18
அகல இருந்தால் பகையும் உறவாம்
When a part , even enmity becomes friendships
19
அகல இருந்தால் புகல உறவு
Separation secures manifest friendship.
20
அகல் வட்டம் பகல் மழை
A large halo a rainy day.
21
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்
He who knows not the price of grain, knows not sorrow.
22
அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்
The moat into which the alligator has plunged is to itself Vaikundam.
23
அக நாக்காய் பேசுகிறான்
He speaks glibly.
24
அகிர்த்தியம செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா
Is it to see the face of one who acts improperly ?
25
அகோரப்பசி விபரீதசோரன்
A terrible ascetic, an atrocious cheat.
26
அகோரப்பசி விபரீத நிபுணன்
In austerity, severe ; in perversity, an adept. Prone to extremes,
27
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
Green pastwre on this shore for the cattle on that.
28
அக்காடு வெட்டி பருத்தி விதைக்கிறேன் என்றால் அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை
If I say that I am about to clear away the jungle to sow cotton seed, my child exclaims, O father, give me a cloth. Sanguine and very auticipatory.
29
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா முழுச்சிற்றாடை என்கிறதாம் பெண்
If I clear away the jungle and sow cotton seed, it is said that the girl exclaimed, O father, a cubit of cloth.
30
அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு
The friendship of a brother-in-law lasts while one’s sister lives.
31
அக்காள் உண்டானால் மச்சான் உண்டு
If one has a sister, he may have a brother-in-law.
32
அக்காள் உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா
Is the property of the elder sister rice, and that of the younger bran?
33
அக்காள் உறவும் மச்சான் பகையுமா
Whilst cherishing friendship for the sister, are you at enmity with the brother-in-law ?
34
அக்காளை கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்
Having taken in marriage the elder sister, why inquire after the rank of the younger ?
35
அக்காளை ப ழித்து தங்கை அபச்சாரியானாள்
Having reproached her elder sister, the younger played the harlot.
36
அக்காள் தான் கூட பிறந்தாள் மச்சானும் கூட பிறந்தானா
My sister was indeed born of the same mother: was my brotherin- law also ?
37
அக்ரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா
Will a dog understand the Vedas, although born in a Brahman village?
38
அக்ரகாரத்துக்கு ஒரு ஆடு வந்தால் ஆளுக்கு ஒரு மயிர்
Should a sheep come into a Brahman village, each person will get but a hair.
39
அக்ரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பியது போல
As a dog longed for the consecrated things of a Brahman village.
40
அக்கினி மலை மேல் கற்பூர பானம் பிரகியோகித்தது போல
As one discharged a camphor arrow at a burning mountain.
41
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்தது போல் இருக்கிறான்
He is as if a libation ‘had been poured out to the god of fire.
42
அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது
A cauterized wound will not fester much.
43
அக்கு தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் என்ன
Whence sorrow to him who has no connections ?
44
அங்கத்தை ஆற்றில் அலை சொணாதா
Is it improper to bathe in a river
45
அங்கத்தை கொண்டு போய் ஆற்றில் அலசினாலும் தோஷம் இல்லை
Although he take his body and wash it in the river, no fault will be found
46
அங்கத்தை கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது
body that has been deprived of life (murdered) may not be put into a river.
47
அங்காங்கு வைபோகமாய் இருக்கிறான் இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை
He is seen everywhere enjoying himself: when looked at in his homestead, he is not worth half a cash
48
அங்காடி விலையை அதிர அடிக்காதே
Do not beat down the market price.
49
அங்காடிக்காரியை சங்கீதம் பாட சொன்னால் வெங்காயம் ஒரு கருவேப்பிலை என்பாள்
If a song be demanded of a woman going along with her market. basket, she will exclaim venkaiyam, karuvéppilai,
50
அங்கிடு தொப்பிக்கு அங்கிரண்டு கூட்டு எங்கிருந்து
One who frequently changes his party will receive two slaps here and three cuffs there.
51
அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன்
Tummattippattan, who had escaped here and there, was caught. Referring to the adventures of a sorcerer.
52
அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
He is here and there and has a share also in the boiled rice.
53
அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய் இங்கே வந்தால் காற்றாய் பறக்கலாம்
Why, my daughter, are you crying there for kanji? come hither and you may fly as the wind.
54
அசல் வாழ்ந்தால் ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்
If her neighbour prospers, she will starve herself for five days.
55
அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா
Is one to go to a forcigu country, because his neighbour prospers
56
அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனை கெடுக்க பார்க்கிறான்
Regardless of circumstances, he aims to destroy his neighbour.
57
அசவாப் பயிறும் கண்டதே உறவும்
Stunted grain friendship at sight, Both valueless.
58
அசைந்து திங்கிறது மாடு அசையாமல் தின்கிறது வீடு
cow eats moving ; a house eats standing.
59
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்
The fearless goes into the assembly.
60
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
A car without a linchpin will not move even three spans.
61
அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு
Though taken to Achchi, a wooden ladle will fetch only half a cash.
62
அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு
There are beggars even in Achchi.
63
அஞ்சன காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்
The cheat has got on the shoulders of the conjurer.
64
அஞ்சலி வந்தனம் ஆறுக்கும் நன்மை
Deferential respect is agreeable to every one,
65
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்
Who will tolerate & presumptuous or impudent man ?
66
அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது
A fifth born female cannot be obtained though earnestly sought.
67
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா
Will that which was not bent at five, bend at fifty ?
68
அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்
Even a fledgeling may scare the timid.
69
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா
Will one ignorant at five understand at fifty ?
70
அஞ்சினவனைப் பேய் பிடிக்கும்
Demons strike the timid.
71
அஞ்சி ஆண்மை செய்
Act manfully, but modestly.
72
அஞ்சினாரைக் கெஞ்சு விக்கும் அடித்தாரை வாழ்விக்கும்
Those who were once feared may be made to beg; and they who were once oppressed may be made prosperous.
73
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்
To the timid the sky is full of demons.
74
அஞ்சு காசுக்கு குதிரையும் வேண்டும் அதுவும் ஆற்றைக் கடக்க பாயவும் வேண்டும்
A horse is required for five cash, and he must be able to leap over a river.
75
அஞ்சு குஞ்சும் கறியாமோ அறியாப்பெண்ணும் பெண்டாமோ
Are five young birds a curry? Is a young girl a wife?
76
அஞ்சுக்கு இரண்டு பழுத்தில்லை
Of the five senses two are uninjured.
77
அஞ்சு பணம் கொடுத்தாலும் இத்தனை ஆத்திரம் ஆகாது
Even if you were to give away five fanams, such haste or precipitation will not do.
78
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்
If possessed of five and three even a young girl may makea curry.
79
அஞ்சுருத்தாலி நெஞ்சுருவரக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலகாரமாய் பேசுகிறான்
Thou speakest ostentatiously as a matron who has come having her bosom adorned with a tali ornameuted with five figures
80
அஞ்சு வயது ஆண் பிள்ளைக்கு ஐம்பது வயது பெண் கால் முடக்க வேண்டும்
woman of fifty must bend the knee before a boy of five.
81
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்
He aims to humble the timid by force
82
அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி ஐங்கல அரிசி ஒரு கவளம்
Conflict in five villages is but curry, five maracals of rice is only a mouthful.
83
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப் போல் இருக்கிறது
The five letters and the sentiment are like him.
84
அடக்கத்து பெண்ணுக்கு அழகேன்
Of what use is beauty to a damsel living in retirement
85
அடக்கமுடையார் அறிஞர் அடங்காதார் கல்லார்
The well-ordered are wise; the disorderly are fools.
86
அடக்கமே பெண்ணுக்கு அழகு
Modesty is the ornament of a woman.
87
அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்
A dwarf without restraint an unused tomtom he wanders about.
88
அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த் தடி
A bamboo staff is the king of a vicious snake.
89
அடங்காத பெண்சாதியிலே அத்தைக்கும் கமக்கும் பொல்லாப்பு
A disobedient wife is an evil both to her mother and to one’s self.
90
அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்
disobedient wife’and a self-willed husband.
91
அடங்கின பிடி பிடிக்க வேண்டும் அடங்காத பிடி பிடிக்கலாகாது
Seize that which can be grasped, not that which cannot.
92
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு
Even tender creepers when united are strong.
93
அடா என்பான் வெளியே புறப்படான்
He will speak abusively, but will not, come out.
94
அடாது செய்தவர் படாது படுவார்
They who do what they ought not, will suffer what they might have avoided.
95
அடி அதிரசம் குத்து க் கொழுக்கட்டை
slap is a cake, a cuff is sweetmeat.
96
அடி உதவுகிறது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா
Will an elder or younger brother aid: one as effectually as discipline or punishment
97
அடிக்க அடிக்க பந்து விசை கொள்ளும்
The more a ball is struck, the more it rebounds.
98
அடிக்கிற காற்றுக்கும் பெய்கின்ற மழைக்கும் பயப்பட வேண்டும்
Beware of a beating wind and of falling rain.
99
அடிக்கிற காற்று வெயிலுக்கு பயப்படுமா
Does the beating wind fear the sunshine ?
100
அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்ற வேண்டும்
Winnow while the wind blows.
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
23