Dataset Viewer
Auto-converted to Parquet
athikaram
stringclasses
10 values
poem
stringlengths
27
84
explanation
stringlengths
29
228
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.
1. சிறந்த பத்து
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.
1. சிறந்த பத்து
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.
1. சிறந்த பத்து
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
1. சிறந்த பத்து
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை.
1. சிறந்த பத்து
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை.
1. சிறந்த பத்து
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து.
1. சிறந்த பத்து
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.
1. சிறந்த பத்து
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்.
1. சிறந்த பத்து
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.
2. அறிவுப்பத்து
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப
ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.
2. அறிவுப்பத்து
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.
2. அறிவுப்பத்து
14. கற்றது உடைமை காட்சியின் அறிப
ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.
2. அறிவுப்பத்து
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.
2. அறிவுப்பத்து
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.
2. அறிவுப்பத்து
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.
2. அறிவுப்பத்து
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.
2. அறிவுப்பத்து
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.
2. அறிவுப்பத்து
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப
ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர். - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்.
3. பழியாப் பத்து
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்
மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்.
3. பழியாப் பத்து
23. பெருமை உடையதன் அருமை பழியார்
பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்.
3. பழியாப் பத்து
24. அருமை யுடையதன் பெருமை பழியார்
அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்.
3. பழியாப் பத்து
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்
ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்.
3. பழியாப் பத்து
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்
நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்.
3. பழியாப் பத்து
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்.
3. பழியாப் பத்து
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்
தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்.
3. பழியாப் பத்து
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்
வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்.
3. பழியாப் பத்து
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது.
4. துவ்வாப் பத்து
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது
இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது
4. துவ்வாப் பத்து
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது
நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது.
4. துவ்வாப் பத்து
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது
செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது
பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது
ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது
அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.
4. துவ்வாப் பத்து
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,
5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்.
5. அல்ல பத்து
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று.
5. அல்ல பத்து
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று
மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.
5. அல்ல பத்து
44. சோராக் கையன் சொன்மலை யல்லன்
பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்.
5. அல்ல பத்து
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்
வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
5. அல்ல பத்து
46. நேராமற் கற்றது கல்வி யன்று
கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று.
5. அல்ல பத்து
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று.
5. அல்ல பத்து
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று.
5. அல்ல பத்து
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று.
5. அல்ல பத்து
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.
மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை.
6. இல்லைப் பத்து
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை.
6. இல்லைப் பத்து
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
6. இல்லைப் பத்து
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை.
6. இல்லைப் பத்து
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.
6. இல்லைப் பத்து
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை.
6. இல்லைப் பத்து
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை.
6. இல்லைப் பத்து
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை
புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.
6. இல்லைப் பத்து
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை.
6. இல்லைப் பத்து
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை
இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,
7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
7. பொய்ப் பத்து
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்
பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்.
7. பொய்ப் பத்து
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்
கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.
7. பொய்ப் பத்து
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்
காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
7. பொய்ப் பத்து
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்
எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.
7. பொய்ப் பத்து
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்
மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.
7. பொய்ப் பத்து
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்
பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.
7. பொய்ப் பத்து
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்
பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.
7. பொய்ப் பத்து
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்
பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.
7. பொய்ப் பத்து
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.
மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.
8. எளிய பத்து
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது.
8. எளிய பத்து
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது.
8. எளிய பத்து
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.
8. எளிய பத்து
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது.
8. எளிய பத்து
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்பம் எளிது.
8. எளிய பத்து
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது.
8. எளிய பத்து
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது.
8. எளிய பத்து
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது.
8. எளிய பத்து
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது
நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,
9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று
தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று
பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்.
9. நல்கூர்ந்த பத்து
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று
தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று
மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று
தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று
மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று
மதியாதார்முன் வெகுளும்வெகுட்சி வறுமையுறும்.
9. நல்கூர்ந்த பத்து
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
10. தண்டாப் பத்து
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்.
10. தண்டாப் பத்து
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்.
10. தண்டாப் பத்து
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்.
10. தண்டாப் பத்து
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
10. தண்டாப் பத்து
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்.
10. தண்டாப் பத்து
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்.
10. தண்டாப் பத்து
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்.
10. தண்டாப் பத்து
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
10. தண்டாப் பத்து
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான். முதுமொழிக்காஞ்சி முற்றிற்று. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,

💎 முதுமொழிக்காஞ்சி (Mudhumozhi Kanchi) Dataset

முதுமொழிக்காஞ்சி (Mudhumozhi Kanchi) is one of the Pathinen Keezhkanakku (Eighteen Minor Works) in Tamil literature.
It was composed by மதுரைக் கூடலூர் கிழார்.

The text consists of 10 athikarams (chapters), each containing 10 kurattazhis (verses).
The work primarily discusses Aram (virtue), Porul (wealth), and Inbam (love/pleasure), providing ethical guidance and moral reflections.

This dataset provides a structured digital version of Mudhumozhi Kanchi, segmented into athikaram, poem, and explanation, which is valuable for Tamil NLP, moral text analysis, and cultural preservation.


📂 Dataset Structure

Each entry in the dataset contains:

  • athikaram (string) → Chapter title
  • poem (string) → Original Tamil verse
  • explanation (string) → Commentary / meaning in Tamil

Example:

[
  {
    "athikaram": "1. சிறந்த பத்து",
    "poem": "1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\r\n                ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை",
    "explanation": "கடல் சூழ்ந்த உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை."
  },
  {
    "athikaram": "1. சிறந்த பத்து",
    "poem": "2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்",
    "explanation": "பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்."
  }
]

📊 Dataset Statistics

Total Chapters (Athikarams): 10

Total Verses: 100 (10 per chapter)

Language: Tamil (ta)

Format: JSON / JSONL

Size: ~50–60 KB

💡 Use Cases

Tamil NLP & AI → verse-to-explanation mapping, semantic analysis, classification of moral values

Digital Heritage → preservation of Tamil ethical literature in machine-readable form

Education → teaching classical Tamil literature and moral philosophy

Comparative Literature → exploring Aram, Porul, Inbam across texts and cultures

🔑 Licensing

Texts (Poems): Public Domain (classical Tamil literature)

Explanations: Released under CC BY 4.0 (free to use with attribution)

#முதுமொழிக்காஞ்சி #PathinenKeezhkanakku #சங்கஇலக்கியம் #TamilLiterature #TamilPoetry #ClassicalTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #PoetryDataset #TamilAI #OpenSource

Downloads last month
11