Dataset Viewer
topic
stringlengths 12
47
| poems
listlengths 1
5
| explanation
listlengths 1
1
|
---|---|---|
கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
|
[
"மனையுறை புறவின் செங்காற் சேவல்",
"இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாதுஇரவும் பகலும் மயங்கிக் கையற்றுமதலைப் பள்ளி மாறுவன இருப்பக்"
] |
[
"வீட்டுப் புறாக்கள் இணை புறாக்கள் செங்கால் புறாக்கள் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே மேயும் பழக்கம் கொண்ட புறாக்கள் மன்ற வெளிகளில் மெயும் புறாக்கள் குளிர் மிகுதியால் அவை மேயவில்லை மதலைப் பள்ளியில் மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக வடவர் தந்த வான்கேழ் வட்டம்தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்கூந்தல் மகளிர் கோதை புனையார்பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்தசெங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்சிலம்பி வானூல் வலந்தன தூங்கவானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்கல்லென் துவலை தூவலின் யாவரும்தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் பகுவாய்த் தடவில் செந்நெருப் பாரஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடைகொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்துகூதிர்நின் றன்றாற் போதே மாதிரம் செல்வர் மாளிகை பாதுகாப்பாளர் இருக்கும் மாளிகை பணியாளர்கள் கொள்ளுப் போன்ற வட்டமான கல்லில் மணக்கூட்டுப் பொருள்களை அரைக்கின்றனர் வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருள் அது வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும் தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர் அதனைச் சூடிக்கொள்வதற்கு முன்பு தகரம் பூசிக் குளித்தனர் நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும் வெண்ணிற அயிரையும் சாம்பிராணியையும் போட்டுப் புகைத்து உலர்த்திக்கொண்டனர் கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது மேல்மாடத்தில் தென்றல் வீசும் கட்டளை சன்னல் திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை மாறாக அகன்ற வாயை உடைய தடவில் தடா வட்டி சுடச்சுட வெந்நீரைப் பருகினர் ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில் யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால் அவற்றைச் சூடாக்கும் பொருட்டு யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர் பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது"
] |
அரசியின் அரண்மனைமனை வகுத்த முறை
|
[
"விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து",
"நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து"
] |
[
"அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான் கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான் நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை ஏறும் பொழுதாகவும் இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான் திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான் மூலைப்பக்கம் நோக்காமல் கட்டடம் கட்டுவது அக்கால மரபு தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்"
] |
கோபுர வாயில்
|
[
"ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத்",
"துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டுநாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து",
"ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலைவென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்"
] |
[
"வளைந்த முகடுகளை உடைய மனை அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில் குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில் அதில் இரட்டைக் கதவு கதவைத் தாங்கும் இரும்பு ஆணி அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு அதற்கு உத்தரம் என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள் கதவுக்குத் தாழ்ப்பாள் இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் கைவல் கம்மியன் தாழ்ப்பாளும் கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது"
] |
முற்றமும் முன்வாயிலும்
|
[
"திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து",
"நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றைகுறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்"
] |
[
"அரசி அரண்மனைக்குத் திருநகர் என்று பெயர் அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம் அதில் வெண்ணிற எகினமும் அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன"
] |
அரண்மனையில் எழும் ஓசைகள்
|
[
"பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவிபுல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடுநிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்",
"கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயலஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசைநளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில"
] |
[
"கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் தெவிட்டும் புலம்பல் ஒலி நிலா முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய் அதன் வழியாக அம்பணம் என்னும் தொட்டியில் விழும் அருவி நீரின் ஒலி அருகே தோகை மயில் கொம்பூதும் ஒலி போல் சிலம்பும் ஒலி இப்படிப்பட்ட ஓசை அந்த மனைக்கோயிலில் கேட்டுக்கொண்டிருந்தன"
] |
அந்தப்புரத்தின் அமைப்பு
|
[
"யவனர் இயற்றிய வினைமாண் பாவைகையேந் தையகல் நிறையநெய் சொரிந்துபரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரிஅறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப்",
"பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லதுஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்வரைகண் டன்ன தோன்றல வரைசேர்புவில்கிடந் தன்ன கொடிய பல்வயின்வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ",
"மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்கருவொடு பெயரிய காண்பி னல்லில்"
] |
[
"அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது ஐந்து திரிமுனைகள் கொண்டது பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை அது மலை போல் தோன்றும் மனை அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்"
] |
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
|
[
"தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்",
"இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்துசீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபுதூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்",
"புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டுஉள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்"
] |
[
"அரசியின் கட்டிலின் கால்கள் ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான் இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும் வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன அந்தக் கட்டிலைப் பாண்டில் என்று வழங்கினர்"
] |
கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
|
[
"மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டுமுத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்",
"புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்துஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்வேட்டம் பொறித்து வியன்கட் கானத்துமுல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த",
"மெல்லிதின் விரிந்த சேக்க மேம்படத்"
] |
[
"சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள் படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது மெத்தையின் துணியில் வயமான் சிங்கம் வேட்டையாடுவது போலவும் முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்"
] |
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
|
[
"துணைபுணர் அன்னத் தூநிறத் தூவிஇணையணை மேம்படப் பாயணை யிட்டுக்காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்தோடமை தூமடி விரித்த சேக்கை"
] |
[
"மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை மேல்மெத்தையில் அன்னத்தின் தூவிகள் திணிக்கப்பட்டிருந்தன ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுத் தூவிகள் அவை அதன் மேல் துணி விரிப்பு அது கஞ்சி போட்டுச் செய்த சலவை மடிப்பு விரித்த துணி ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்துநன்னுதல் உலறிய சின்மெல் லோதிநெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கைவலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்துவாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடுபுனையா ஓவியங் கடுப்பப் புனைவில் அரசியின் முலைமேல் முத்தாரம் அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள் அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது முன்கையில் சங்கு வளையலும் காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள் சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது மொத்தத்தில் அவள் புனையா ஒவியம் போலக் காணப்பட்டாள்"
] |
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
|
[
"தளிரேர் மேனித் தாய சுணங்கின்அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலைவம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்",
"மெல்லியல் மகளிர் நல்லடி வருடநரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்குறியவும் நெடியவும் உரைபல பயிற்றிஇன்னே வருகுவர் இன்துணை யோரென",
"உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து"
] |
[
"பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர் அந்தப் பணிப்பெண்கள் தளிர் போன்ற மேனி அதில் சுணங்கு மடிப்பின் அழகு மூங்கிலை வென்ற தோள் பருவத்தில் தோன்றும் முலையில் கச்சு என்னும் வம்பு முடிச்சுக் கட்டுத்துணி மெல்லிய இடை ஆகியவற்றைக் கொண்டு கட்டழகுடன் காணப்பட்டனர் அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர் செந்நெறி இது என முகத்தால் கூறும் செவிலியர் உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார் என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர் இவற்றைக் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை கலங்கினாள்"
] |
தலைவியின் வருத்த மிகுதி
|
[
"நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக",
"விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்துமுரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇயஉரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிராமாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனிசெவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்",
"புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு"
] |
[
"அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது அந்த மேல்கட்டியின் கால்கள் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள் இன்னா அரும்படர் தீர விறறந்துஇன்னே முடிகதில் அம்ம மின்னவிர் அந்த அரிவைப்பெண் புலம்பிக்கொண்டு வாழ்கிறாள் அது துன்பம் தரும் நினைவோட்டம் அது தீரவேண்டும் அதற்கு வழி அவளது தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும் போர் இப்போதே முடியவேண்டும் இது பாடலின் முடிவு"
] |
பாசறையில் அரசன் நிலை
|
[
"ஓடையொடு பொலிந்த வினைநவில் யானைநீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்",
"களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்துவடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல",
"வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடுமுன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடுபருமங் களையாப் பாய்பரிக் கலிமாஇருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப",
"புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇவாள்தோள் கோத்த வன்கட் காளைசுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்துநூல்கால் யாத்த மாலை வெண்குடைதவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப",
"நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்சிலரொடு திரிதரும் வேந்தன்பலரொடு முரணிய பாசறைத் தொழிலே."
] |
[
"யானை மின்னி ஒளிரும் யானை ஓடை நெற்றியில் கொண்ட யானை போர்த்தொழில் திறம் பெற்ற யானை தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி பெருஞ்செய் ஆடவர் பெருஞ்செய் என்பது போர்க்களம் யானை நிலத்தில் புரளும்படி போரிட்ட ஆடவர் யானையை வீழ்த்திய ஆடவர் வாள் புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான் வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான் அரசன் பெருஞ்செய் ஆடவரைக் கண்டான் முதுகில் மணி தொங்கும் பெண் யானைகளைக் கண்டான் இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான் சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்து கண்டான் விழும் பனித்துளியில் நனைந்துகொண்டே சென்று கண்டான் காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டே சென்று கண்டான் வாளைத் தோளில் கோத்துக்கொண்டிருந்த மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்று கண்டான் ஆர்வம் தழுவிய முகத்துடன் கண்டான் நூல் குஞ்சம் தொங்கும் அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது அது நள்ளிரவு நேரம் அவன் தன் படுக்கையில் இல்லை சிலரோடு திரிந்துகொண்டிருந்தான் இது அவன் பாசறைத் தொழில் இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப்பெற வேண்டும் ஆரிவையின் நினைவலைத் துன்பம் தீர முற்றுப்பெற வேண்டும் இது பாடலின் முடிபு"
] |
📝 Dataset Card: Nedunalvaadai
This dataset contains the classical Sangam Tamil literature work Nedunalvaadai, covering all 5 parts.
Each entry includes:
Topic (section heading)
Poem lines (original verses)
Explanation (detailed meaning in Tamil)
It is useful for Tamil NLP, literary analysis, translation tasks, and language modeling.
Supported Tasks
📖 Language Modeling
🔎 Poem → Explanation Mapping
🗣 Text Generation (Tamil)
🔤 Text Cleaning & Preprocessing
Languages
Primary: Tamil (ta)
Dataset Structure
Data Fields
poems (list[string]): The lines of the poem.
explanation (list[string]): The explanation/meaning in Tamil.
```Example
{
"topic": "முழுவலி மாக்கள் தெறுக்களில் சுற்றித் திரிதல்",
"poems": [
"மோசையை மல்லன் மூதார்",
"இடந்தன் அகல்ந்தெறிந்து திருக்கிரி"
],
"explanation": [
"இது ஒரு தமிழ் விளக்கம்"
]
}
Citation
If you use this dataset, please cite:
@dataset{nedunalvaadai_2025,
}
#tamil #nlp #literature #sangam #poetry #dataset #text #language-modeling #translation #classical-literature
#tokenization #text-generation #text-classification #low-resource
- Downloads last month
- 87