ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
குறிப்பறிதல் | கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி | He who reads minds by observing, with no words spoken, is ever an adornment for the world with unchanging oceans |
குறிப்பறிதல் | ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் | Rate him amongst gods, he who can read minds with indubitable certainty |
குறிப்பறிதல் | குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் | Those who can read minds based on gestures or expressions – if need be, give any of your organs to have them with you |
குறிப்பறிதல் | குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு | Who can sense thoughts without being told, they are distinct, resembling others only in their human forms |
குறிப்பறிதல் | குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் | If one can’t observe and interpret body language, what purpose do eyes serve amongst the organs |
குறிப்பறிதல் | அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் | The face, like a crystal that shows the hues of objects around, betrays the mood of the mind |
குறிப்பறிதல் | முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் | What can be smarter than the face? It is quick to sense and show if the heart is pleased or peeved |
குறிப்பறிதல் | முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் | When those who can look into your heart and know your intentions, be with you, tasks will be accomplished if you just face them |
குறிப்பறிதல் | பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் | The eyes will convey the animosity or affinity to those who can decipher the subtleties of the eyes |
குறிப்பறிதல் | நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற | The scale used by the astute to gauge the emotions, if you think of it, is nothing but the eyes |
அவையறிதல் | அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் | Those who are well versed with the various ways of speech, know and assess the audience before speaking |
அவையறிதல் | இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர் | Before speaking,anticipate the reaction of the audience and master the subject, if you are conversant with the modes of expression |
அவையறிதல் | அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல் | Those who know not their audience and yet endeavor to speak, know not the styles of speech and their reach, nor can they be competent |
அவையறிதல் | ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் | Be brilliant before the bright, and amidst the ignorant turn blank as a wall plastered white |
அவையறிதல் | நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு | It is the best among all the good deeds to have the restraint to not speak out of turn, in a forum of learned elders |
அவையறிதல் | ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு | It will tantamount to swerving from the righteous path, being disgraced before an audience, widely-read but highly-receptive |
அவையறிதல் | கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து | The expertise of the erudite gets enhanced by addressing an audience capable of flawlessly grasping those words |
அவையறிதல் | உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று | To speak before an audience who possess clear understanding is like watering a sapling, growing by itself in a nursery |
அவையறிதல் | புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார் | Those who can speak lucidly in a learned forum should refrain from even forgetfully speaking the same in an unworthy forum |
அவையறிதல் | அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் | Speaking before an audience who are no match for you, is like throwing away the elixir of life into the drains |
அவையஞ்சாமை | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் | Those who are well versed with the various ways of speech, will choose the right style for a forum, and won’t blunder out of fear |
அவையஞ்சாமை | கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் | They are known the most learned amongst the learned, those who can express their learnings persuasively before a learned audience |
அவையஞ்சாமை | பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர் | Simple people, ready to die at the warfront, abound; those who fearlessly address an audience are a rare breed |
அவையஞ்சாமை | கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல் | Speak persuasively before the learned, what you have learnt, and absorb more from those who are more learned than you |
அவையஞ்சாமை | ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு | Choose the right works and learn, knowing the limitations, so that you can debate fearlessly with any audience |
அவையஞ்சாமை | வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு | What use is the sword to cowards? Of what use are books to those who fear a learned audience |
அவையஞ்சாமை | பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல் | A sharp sword in the hands of a coward before foes, is the scholarship of him who fears a forum |
அவையஞ்சாமை | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் | They may be of great learning but can serve no purpose if they shy away from speaking compellingly to a good audience |
அவையஞ்சாமை | கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் | Though well learned, they’re considered worse than the ignorant, those who fear an assembly of good people |
அவையஞ்சாமை | உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் | Out of stage-fright, those who can’t articulate their learnings well, maybe alive but are as good as lifeless |
நாடு | தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு | Unfailing crops, exemplary people, and the wealthy with untarnished and undiminishing wealth, constitute a country |
நாடு | பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு | Desirable due to its huge wealth; devoid of detriments for high yields: such should a country be |
நாடு | பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு | In an ideal country, its citizens bear any new burdens which, all at once,afflict them, and continue to willingly pay taxes |
நாடு | உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு | Acute hunger, debilitating diseases and warring foes are absent in a good state |
நாடு | பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு | Multiple factions, destructive dissent, and murderous criminals who torment the rulers are not found in a good state |
நாடு | கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை | It faces no calamities; even if it does, its resources are undiminished: such a nation is the foremost amongst nations |
நாடு | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு | Lakes above and wells below, mountains well-located, rivers and streams flowing from them, and strong fortresses constitute a country |
நாடு | பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து | Health, wealth, high yields, happiness and strong defence – these five adorn a state |
நாடு | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு | A good state is one which yields without toil; it is not one, if one has to toil hard to produce yields |
நாடு | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு | A state might have everything; but they are of no use, if it doesn’t have the right ruler |
அரண் | ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் | A fortress is critical for those on the offensive; so is it, for those on the defensive to protect themselves |
அரண் | மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் | Pearl-like perennial water, sand, mountains and shaded woods – a strong fortress contains all these |
அரண் | உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் | Tall, vast, impregnable and unapproachable – experts prescribe these four measures for forts |
அரண் | சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண் | Boundaries, vulnerable and needing protection, are minimal but area enclosed is vast – such a fortress destroys the confidence of advancing foes |
அரண் | கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண் | A good fortress is unassailable, contains sufficient food and makes life easy for the residents |
அரண் | எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் | A strong fortress contains all required resources and valiant warriors who will support during a siege |
அரண் | முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண் | Neither siege, nor an all-out attack, nor sowing dissent will befell a strong fortress |
அரண் | முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண் | A strong fortress aids those devoted to stay and defend it, to defeat the formidable foes who have besieged it |
அரண் | முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் | A fortress attains glory through the glory attained by its residents, who,through their daring deeds, swiftly subdue the foes on the warfront |
அரண் | எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் | However formidable it maybe, a fortress is futile for those not formidable in their deeds |
பொருள்செயல்வகை | பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் | Wealth makes them, who were deemed worthless, worthy; if not, it is not wealth |
பொருள்செயல்வகை | இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு | The poor are ridiculed by all, and the rich esteemed by all |
பொருள்செயல்வகை | பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று | The unfailing lamp called wealth will dislodge darkness by throwing light anywhere it wants to |
பொருள்செயல்வகை | அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் | It yields righteousness and joy, the wealth acquired capably without causing any harm |
பொருள்செயல்வகை | அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் | Consider it unworthy of acquiring – wealth that is not generated with compassion and love |
பொருள்செயல்வகை | உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் | Funds generated in the normal course, internal taxes and acquisitions from enemies are sources of wealth for the king |
பொருள்செயல்வகை | அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு | The infant called compassion, birthed by love, is nurtured by the rich custodian called wealth |
பொருள்செயல்வகை | குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை | Doing a deed with some wealth on hand is like climbing a hilltop and watching tuskers tussle |
பொருள்செயல்வகை | செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில் | Make money – there is no weapon sharper than it to sever the pride of your foes |
பொருள்செயல்வகை | ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு | For those who have made abundant wealth through fair means, the remaining two (righteousness and love) are easy to achieve |
படைமாட்சி | உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை | A well-structured, indomitable military, never daunted by dire prospects, is primary amongst all possessions of the king |
படைமாட்சி | உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது | The undaunted valour in dire situations, with no fear of consequences, is rarely seen outside of a seasoned army |
படைமாட்சி | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் | What if a rival army of rats comes roaring like an ocean, they will dissipate when the snake hisses |
படைமாட்சி | அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை | A real army is one that displays the innate valour of never getting vanquished by any disaster |
படைமாட்சி | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை | An army is one which has the courage to battle united, even if the Lord of Death descends on them |
படைமாட்சி | மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு | Courage, pride, striding the honorable course, clarity – these four best fortify an army |
படைமாட்சி | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து | The army that can discern the tactics of its advancing foes, will stride over the dust the foes bite |
படைமாட்சி | அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் | An army though bereft of the skills and resources to wage a war, will still gain renown for its discipline and preparation |
படைமாட்சி | சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை | Pettiness, unabated fury and hatred, and poverty – an army not having these will win |
படைமாட்சி | நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் | An army may have brave warriors in abundance, but will meet its end if there are no great leaders |
படைச்செருக்கு | என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர் | Oh foes, stand not facing my leader! Many have done so, and now stand as (memorial) stones |
படைச்செருக்கு | கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது | Better to bear the spear that missed the elephant than the arrow that got the rabbit |
படைச்செருக்கு | பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு | Great manliness lies in bellicose valor; grace towards ailing foes, adds steel to it |
படைச்செருக்கு | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் | He spent his spear slaying an elephant, but breaks into a smile, plucking out the spear that pierces him |
படைச்செருக்கு | விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு | Doesn’t it equal defeat, blinking the eyes when a spear is thrown at him, the eyes that are staring the foe down |
படைச்செருக்கு | விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து | Count those as wasted days, the days when you didn’t earn a wound in a battle |
படைச்செருக்கு | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து | The anklets of courage become ornate when they adorn those who spurn their lives seeking lasting fame |
படைச்செருக்கு | உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் | When a battle begins, the warriors who war without fear for life, do not let their vigour reduce even when the king restrains them |
படைச்செருக்கு | இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் | When he is ready to embrace death to fulfill his vow, who can taunt him for failure |
படைச்செருக்கு | புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து | If one overwhelms his patron with tears while dying for him, death deserves to be beseeched |
நட்பு | செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு | What is better than making friends? What better protection can there be for accomplishing a task |
நட்பு | நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு | Amongst the wise, camaraderie waxes like the crescent, and amongst fools, wanes like the full moon |
நட்பு | நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு | The nuances of a book are enjoyed more, the deeper one reads it; the more you nurture a friendship, the more the joy |
நட்பு | நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு | A friendship is not merely to have fun; it is also to admonish when a friend errs |
நட்பு | புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் | Friendship is forged on shared feelings; physical proximity or long association is inconsequential |
நட்பு | முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு | A smile on the face does not make a friendship; a smile in the depths of the heart does |
நட்பு | அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு | Rescuing from ruin, steering along the right path, and when in distress, sharing it, is friendship |
நட்பு | உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு | Like the hand that moves reflexively to grab a garment that slips, a friend reacts swiftly to remove a woe |
நட்பு | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை | Crowning glory for friendship is when a friend supports unflinchingly in all ways |
நட்பு | இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு | “He is so dear to me; I mean so much to him” – to even utter this, takes the lustre off friendship |
நட்பாராய்தல் | நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு | Nothing can be more pernicious than accepting a friend without assessing; after accepting, there is no letting go of them |
நட்பாராய்தல் | ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் | Assess and assess before taking a friend, else the ensuing anguish will be fatal |
நட்பாராய்தல் | குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு | Know one’s traits, roots, faults and flawless kinship, and then forge a friendship |
நட்பாராய்தல் | குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு | Of high birth, and fears disgrace – give whatever and gain the friendship |
நட்பாராய்தல் | அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல் | When you err, they may chide you till you cry, and show you the right way – assess and accept their friendship |
நட்பாராய்தல் | கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் | There is a gain in grief: it is a tool to stretch and gauge a friend |
நட்பாராய்தல் | ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் | It is a gain to lose the friendship of a fool |
நட்பாராய்தல் | உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு | Think not of trifles that stifle your fervor; take not the friendship of those who desert in distress |
நட்பாராய்தல் | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும் | A friend who abandons in times of adversity, will torment the heart even at death’s door |
நட்பாராய்தல் | மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு | Seek friendship with the impeccable; give anything to sever ties with unbefitting allies |
Subsets and Splits