Dataset Viewer
Auto-converted to Parquet
audio
audioduration (s)
0.28
10.6
sentence
stringlengths
4
227
அவரைப் பொதுமக்கள் விடாமல் பின்னாலேயே துரத்திக் கொண்டே ஓடினார்கள்.
மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை.
ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா?
எட்டையபுர ஜமீன்தார் அவர்கள் தன்னுடைய பெரிய வீடு ஒன்றை நாங்கள் தங்கியிருப்பதற்காகக் கொடுத்தார்.
கல்லிலே பெரும் பகுதியைப் பெருமானுக்கும் கருடனுக்கும் ஒதுக்கி விடுகிறான்.
கொங்குநாடும் அதன் வளமிக்க குறிஞ்சியான கொல்லியும் அவர்கள் ஆணைக்குட்பட்டிருந்தன.
வெளிச்சத்தில் பாலுவை ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் கண்ட லீலா ஹா ஐயோ!
பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள்.
விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை.
பெரும்பாலும், மக்களுக்குள் அவை மறைந்தும் இருந்து கொண்டிருக்கிறது.
என்று பகிரங்கமாகக் கேட்டனர்!
பெரியாழ்வார் கண்ணபிரான் உடைய பால லீலைகளைப் பாடியிருக்கிறார்.
அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்கள் பலப் பல.
அன்றிலிருந்த சீன சர்க்காரின் சட்டப்படி யாருக்கும் சமாதி கட்டக்கூடாது.
இக்காட்சி அமையும் வகையில், கட்டிடம் கட்டிய சிற்பிகளுக்கு நமது தலை தானாகவே வணங்கும்.
ஆனால், அதற்குள் ஹா! என்ற சத்தம் கேட்டது.
ராகவன் புன்னகை புரிந்தான்!
ஆனால், அன்று காலையில் வேணுவிடமிருந்து கடிதம் வந்திருந்தது.
கீழ் மக்கள் கீழ் மக்களே!
கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது.
தேசாபிமானிகள் சங்கத்தார் அவரை வரவேற்றார்கள்.
அவன் தொழில்அறிவு உடையவனா?
புண்ணிய நாட்களில் சித்திரா நதி, புனித கங்கையாகக் கருதப்படுகிறது.
மறுபடியும் இவர் நாட்க மேடை ஏறுவாராயின், எங்கள் சபையும் நானும் செய்த பெரும்பாக்கியமெனக் கொள்வேன்.
பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடிந்தது.
ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம்.
அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் மெளனமாக நின்றேன்.
பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கும் நிலை விரும்பத்தகாததொன்று மாத்திரம் அல்ல, வருந்தத் தக்கதொன்றும்தான்.
இது அணைக் கட்டிலிருந்து ஒருகல் தொலைவில் அமைந்துள்ளது.
அரசு நிர்வாகத்தின் மையப்பங்கு அரசின் உரிமைகளை அதிகாரங்களை யாரும் மீறக்கூடாது.
இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்!
அவன் மார்பில் துயின்ற உமா தூய சுடராகப் பொலிவுற்றாள்!!
வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான்.
அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அரசன் கொண்டது அறநெறியே யாயினும், அவன் போலும், சிறந்த அரசனை இழக்க அவர் விரும்பினாரல்லர்.
தொடக்கமும் முடிவும் பிரசித்தி பெற்ற கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸை, ஒருவர் சந்தித்தார்.
பழனி மலையில் மிகவும் உயர்ந்த சிகரம் வெம்பாடி ஷோலா மலை என்பதாகும்.
குடத்தினின்றும் அமுதம் வழிந்து ஓடியிருக்கிறது.
என்மேல் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
ஆனால் அந்த மனிதர்களையெல்லாம் காக்கும் இறைவன் நல்ல திடமான வைர நெஞ்சு படைத்தவனாக இருந்திருக்கிறான்.
ஓர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்றைந்து ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
காற்று என்பது கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அஃது உடம்பில் உற்று உரசி அறியப்படுகிறது.
ஆள் கருப்பா செகப்பாங்கிறது தெரியலையே.
நல்ல இடம் தான்.
பழங்குடி மக்களைப்பற்றி, எல்லா நாடுகளிலும் பேசப் படுகிறது.
அன்று அப்பெண்ணை நீரில் குளிப்பாட்டுவர்.
அகிலனை சிரஞ்சீவியாக்குவது இது ஒன்றுதான்!
இது சரியாக இல்லாவிட்டால் எந்த நாகடமும் சோபிக்காது.
அதுவரை சீனத்துக்கு எவை எவை?
உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும்.
வன போசனம் உண்பதற்கு இது மிகவும் ஏற்ற இடமாக எல்லோராலும் இப்பொழுது கருதப்படுகிறது.
சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் சூப் வைத்துக் குடிக்க வேண்டும்.
பிரிவு என்னைத்தான் வாட்டுகிறதா?
அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, நாடகமா ஆட வேண்டும்?
விழுமம் தீர்த்த விளக்குக் கொல் என்பாள் அவள்.
அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே!
உங்களது இந்தத் தூக்கம்தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது.
அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது.
இவர்கள் மொழி கொச்சைத் தமிழ்.
அவ்வாறு செய்யப்படும் பொடியை எம்ரி பொடி என்று அழைக்கின்றனர்.
அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது.
அவர்களுக்கே அப்படியிருக்க, கேவலம் இல்லறத்தில் உழலும் என்போன்ற பேதையர்க்குச் சொல்வானேன்!
தமிழகத்தில் ஊட்டி இருப்பதைப் போல் இலங்கையில் இந்த இடம் குளிர்பபிரதேசமாக விளங்குகிறது.
மாலை நேரம் மணி நான்கு இருக்கும்.
இதன் தனிச் சிறப்பு மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது.
அவள் அழகும் பிரமாதம் என்று வியக்கத் தக்கதாயில்லை யெனினும் சில நட்சத்திரங்களின் அழகை விட நன்றாகத் தானிருந்தது.
அவனை மன்னிப்பதால் வரக்கூடிய ஆனந்தம் கைநழுவிப் போனமைபற்றி வருந்துகிறேன்! என்று சொன்னான்.
சிற்றின்பமாக இருப்பினும் பேரின்பமாக இருப்பினும் வார்த்தைக்குள் அடங்காது.
அதனைப் பரம்பொருள் என்று கூறலாம்.
நடராஜன் ஓர் சீர்திருத்த ஆர்வமுள்ள இளைஞன்.
நாடகமாடுவதென்றால் பாட்டு இல்லாமல் உதவாது என்று அபிப்பிராயப்படுவோர் இதைச் சற்றுக் கவனிப்பாராக.
சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது.
இப்பொழுது இந்த லாபமும் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு என்னை நிந்திக்க ஆரம்பித்தனர்.
இப்படி வெள்ளி, தங்கம், நிலக்கரி, வைரம் ஆகிய எல்லாவற்றையும் பூமி தனக்குள் வைத்திருக்கிறது.
நான் உத்தரவு கொடுக்கும் வரையில் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்காதே! என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார்.
உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது.
அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான்.
இங்கு நடந்த நாடக தினங்களில், ஏறக்குறைய தினம் மழை பெய்தபோதிலும், நல்ல வசூலாயிற்று.
தமிழ் மக்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர்.
ஊருக்குள் செல்ல இரண்டு வழி உண்டு.
நிமிர்ந்த பின்னரே மூச்சை வெளியே விட வேண்டும்.
இந்த வாக்கியத்திலேயே உண்மை அடங்கியிருக்கிறது.
நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படி யெல்லாம் நம்பிக் கடைசியில் கெட்டுப்போனேன்.
எதையும் பின் தொடர்ச்சியாகக் கவனிக்கத் தவறினால் கெடும்.
கடமைகள் அழுத்தும் பொழுது அவலத்திற்கு ஆளாவோர்கள் கடமைகளைச் செய்யும் மனப் போக்கில்லாதவர்கள்.
இதற்குரிய தீர்வும் சொல்லப்படுகிறது.
அமைப்பு நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது.
அவற்றுள் முதலாவது கார் காலம் அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது.
கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்?
தக்க வீரன் கிடைக்கவில்லை, தவித்தனர்.
அவன் தன் தாய், மனைவி, குழந்தை, தேசம், மற்ற மக்கள் எல்லோரையுமே நேசிக்கிறான்.
பிறகு, உள்ளே நுழைந்தது.
வீட்டிற்கு வந்த பின் அவருடைய மாணர்க்கார்கள், சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்?
சுந்தரவரத ஐயங்கார், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான ராஜேஸ்வரி யாக மிகவும் நன்றாய் நடித்துச் சபையோரைத் திர்ப்தி செய்தனர்.
சந்திரனைப் பற்றியும் ஒரு கதை உண்டு.
இறந்தபிறகும் அது நல் வாழ்வு பெறுக என்று தானம் செய்தனர்.
பெண்கள் மார்பை மூடும்படி அக்குளைச் சுற்றிக் குறுகலான மேலாடை யணிகின்றனர்.
என் கவலைக்கு வைகறையாகிறது ஒருபெயர் என் கனவுக்கு நனவாகிறது ஒருபெயர்.
அதன் நடுவில் இருந்த அழகான சரவணப் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன.
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
3