sentence
stringlengths 1
79k
|
---|
சுதீரா தாசு 8 மார்ச் 1932 30 அக்டோபர் 2015 என்பவர் இந்தியப் பொறியாளர் ஆவார். |
சிலோன் வெட்டு மேற்பக்க அடிப்பக்க தோற்றங்கள் சிலோன் வெட்டு என்பது இரத்தின வெட்டுப் பாணிகளில் ஒன்றாகும். |
சலீம் ஷாஜதா என்று அழைக்கப்படும் மாஸ்டர் சலீம் ஒரு இந்தியப் பாடகர் ஆவார் இவர் பக்திப் பாடகராகவும் பாலிவுட் படங்களில் பின்னணிப் பாடகராகவும் அறியப்பட்டவர் ஹே பேபி 2007 தோஸ்தானா மற்றும் லவ் ஆஜ் கல் 2009 போன்ற பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். |
சதீந்தர் சர்தாஜ் என்று பிரபலமாக அறியப்படும் சதீந்தர் பால் சிங் ஒரு இந்திய பாடகர் பாடலாசிரியர் நடிகர் மற்றும் பஞ்சாபி மொழியின் கவிஞர் ஆவார். |
பாபன் தாஸ் பௌல் பிறப்பு 1961 இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பௌல் பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் அவர் ஒரு டப்கி ஒரு சிறிய வந்திரதம் மற்றும் சில சமயங்களில் ஒரு ஏக்தாராவை துணையாக கொண்டு இசையமைத்து பாடுவார். |
இந்துலதா சுக்லா 7 மார்ச் 1944 30 ஜூன் 2022 என்பவர் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்தியக் கல்வியாளர் ஆவார். |
பிரபா ஆர். |
விஜய லட்சுமி மெல்னிக் பிறப்பு 19 நவம்பர் 1937 என்பவர் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவில் பிறந்த அமெரிக்கக் கல்வியாளர் ஆவார். |
இந்திய அறிவியல் விருது அறிவியலுக்கான சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க தேசிய அங்கீகாரமாகும்.. விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்ட மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பம்சமே விருதிற்கான முதன்மை மற்றும் அத்தியாவசியமான அளவுகோலாகும். |
நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனம் நார்வே நாட்டில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். |
ஹிகாயத் செரி ராமாவின் கதையை விவரிக்கும் ஒரு கிளந்தானிய வயாங் குளிட் . |
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். |
டாக்டர். |
வயாங் குளிட் என்பது இந்தோனேசியாவில் சாவகம் மற்றும் பாலி கலாச்சாரங்களில் முதலில் காணப்படும் நிழற் பொம்மலாட்டத்தின் பாரம்பரிய வடிவமாகும். |
உஷா விசயராகவன் என்பவர் பிறப்பு. |
வீர் பாலா ரசுதோகி என்பவர் இந்தியாவில் உயிரியல் பாடப்புத்தகங்களை எழுதிய உயிரியலாளர் ஆவர். |
தேவி முழுப்பெயர் வேதிசாமகாதேவி சாக்யகுமாரி என்பவர் இலங்கையின் சரித்திரத்தின்படி மூன்றாவது மௌரியப் பேரரசர் அசோகரின் முதல் மனைவியும் இராணியும் ஆவார். |
நிக்கி ஹேலே பிறப்புசனவரி 20 1972 ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பெண் அரசியல்வாதிவாதி ஆவார். |
பாஞ்சி கதைகள் முன்னர் பாண்டிஜி என்று உச்சரிக்கப்பட்டது என்பது சாவகக் கதைகளின் சுழற்சி ஆகும். |
இந்திரா நாத் 14 சனவரி 1938 24 அக்டோபர் 2021 என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார். |
கேம்லான் என்பது இந்தோனேசியாவின் சாவக மக்கள் சுண்டானி மக்கள் மற்றும் பாலி மக்கள் ஆகியோரின் பாரம்பரிய இசைக் குழுவாகும். |
மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். |
பேர்ல் பதம்சீ 1931 24 ஏப்ரல் 2000 19501990 களில் மும்பையில் ஆங்கில மொழி நாடகத்தில் புகழ்பெற்ற இந்திய நாடக ஆளுமை ஆவார். |
ஷோபா சென் 17 செப்டம்பர் 1923 13 ஆகஸ்ட் 2017 சோவா சென் என்றும் அழைக்கப்படுகிறார் பெங்காலி நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார். |
ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி சிறிய நீல மக்காவ் கிளி என்றும் அழைக்கப்படுவது பிரேசிலைச் சேர்ந்த ஒரு அகணிய மக்காவ் இனமாகும். |
ஊர்மிளா பாலவந்த் ஆப்தே 1988ஆம் ஆண்டு பாரதியஸ்ட்ரீ சக்தி அமைப்பின் இந்தியா நிறுவனர் ஆவார். |
உஷாதேவி நரேந்திர போசுலே இந்தியக் கணிதவியலாளர் கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். |
நாகம்பாள் டி. |
விட்டல் உமாப் 15 ஜூலை 1931 27 நவம்பர் 2010 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக சேவகர் ஆவார். |
கர்னைல் கில் பஞ்சாபின் நாட்டுப்புற பாடகர் ஆவார். |
ஆதர்ஷ் ரத்தோர் ஹிந்தியில் பிறப்பு 12 ஜூன் 1988 ஒரு இந்திய பத்திரிகையாளர் இசைக்கலைஞர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற பாடகர் ஆவார் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் புது தில்லி ஊழலைப் பற்றி திக்கர் ஹை என்ற ராப் பாடலுக்கு மிகவும் பிரபலமானவர். |
தப்பியோடியவர் குற்றச் செயல் புரிந்தோர் காவல் துறை அல்லது சிறைச்சாலை அல்லது நீதிமன்ற விசாரணை அல்லது புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி ஓடிய தேடப்படும் நபரைக் குறிக்கும். |
பேதிந்தி மது பிரியா என்பவர் இந்தியத் தெலுங்கு பின்னணி பாடகி ஆவார். |
ராமேஷ்வர் பதக் 1 மார்ச் 1938 3 டிசம்பர் 2010 இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள காம்ரூப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற காம்ரூபி லோக்கீத் பாடகர் ஆவார். |
உஸ்தாத் அதீக் ஹுசைன் கான் பந்தனவாசி அல்ஹஷ்மி கவ்வால் பிறப்பு 1980 ஒரு இந்துஸ்தானி கவ்வால் பாடகர் ஆவார். |
பூரன் தாஸ் பால் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் என்று பிரபலமாக அறியப்படும் இவர் பிறப்பு 18 மார்ச் 1933 பௌல் பாரம்பரியம் கொண்ட ஒரு இந்திய இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். |
சர்மயா கலை அறக்கட்டளை என்பது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள கலை கலைப்பொருட்கள் மற்றும் வாழும் மரபுகளின் இலாப நோக்கற்ற களஞ்சியமாகும். |
திரிப்தி மித்ரா நீ பஹதுரி 25 அக்டோபர் 1925 24 மே 1989 பெங்காலி நாடகம் மற்றும் திரைப்படங்களில் பிரபலமான இந்திய நடிகை மற்றும் பிரபல நாடக இயக்குனரான சோம்பு மித்ராவின் மனைவி ஆவார். |
பாரதி ஷர்மா பிறப்பு 15 அக்டோபர் 1961 ஒரு இந்திய நாடக இயக்குனர் நடிகர் மற்றும் ஆசிரியர் ஆவார். |
அனாஹிதா உபெராய் பிறப்பு 1967 நாடகங்கலில் பிரபலமான ஒரு இந்திய நடிகை ஆவார். |
விபூல் கல்யாணி தற்போதைய தலைவர் குசராத்தி இலக்கிய கழகம் முன்பு குசராத்தி சாகித்ய மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். |
தேசிய கவிதை என்பது ஒரு மொழியில் கவிதை பற்றிய பட்டியல் அல்லது ஒரு தேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிதை ஆகும். |
மசுகருல் இசுலாம் கவிதை விருது ஆங்கிலம் மஜருல் இஸ்லாம் கபிதா புரோஷ்கர் என்பது வங்க மொழிக் கவிதைத் துறையில் சாதனை மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பில் சேவையாற்றிய கவிஞர்களை அங்கீகரிப்பதற்காக வங்காளதேச வங்காள அகாதமியால் வழங்கப்படுகிறது. |
காசி அப்துல் வதூத் 26 ஏப்ரல் 1894 19 மே 1970 ஒரு வங்காள கட்டுரையாளர் விமர்சகர் நாடகாசிரியர் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார். |
சஜனிகாந்த தாசு 25 ஆகத்து 1900 11 பிப்ரவரி 1962 என்பவர் வங்க மொழிக் கவிஞர் இலக்கிய விமர்சகர் மற்றும் ஷானிபரர் சித்தியின் ஆசிரியர் ஆவார். |
தந்த மூக்கு மரங்கொத்தி என்பது உலகிலிருந்து அற்றுவிட்ட மரங்கொத்தி ஆகும். |
நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். |
விபாவரி தேஷ்பாண்டே ஒரு இந்திய நடிகை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். |
குருசாமி சந்திரன் பிறப்பு ஏப்ரல் 08 1970 என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நாட்டுப்புற ஆய்வாளர் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் ஆவார். |
கவிதா சீனிவாசன் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். |
யமுனை இந்து மதத்தில் ஒரு புனித நதி மற்றும் கங்கை நதியின் முக்கிய துணை நதியாகும். |
வில்லுப்பாட்டு மாதவி தமிழகத்தின் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் வாழும் மாரிச்செல்வம்மாலதி தம்பதியருக்கு பிறந்தவர் மாதவி. |
சத்தியேந்திர குமார் ஜெயின் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். |
பதூம் அல்லது பதம் இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் ஒன்றிய பகுதியின் கார்கில் மாவட்டத்தின் சன்ஸ்கார் வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். |
" ஓகே பூமர் " இந்தியாவில் பூமர் அங்கிள் என்பது ஒரு பிடி வரி மற்றும் இணைய பகடிச் சொல் ஆகும். |
சஞ்சனா கபூர் பிறப்பு 27 நவம்பர் 1967 ஒரு இந்திய நாடக ஆளுமை மற்றும் முன்னாள் திரைப்பட நடிகை ஆவார். |
அர்பிதா கோஷ் ஒரு இந்திய நாடக கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். |
ஜெய மேத்தா என்பவர் ஜெய வல்லபதாசு மேத்தா என்றும் அறியப்படுபவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த குசராத்தி மொழிக் கவிஞர் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். |
லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என்பது உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. |
மும்பை திருமதி நதியாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட தபால்தலை. |
அக்லிஸ் பண்டைய கிரேக்கம் "மூடுபனி" ஹெராக்கிளிஸின் ஹெஸியோடிக் கவசத்தில் ஹெராக்கிள்ஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களில் ஒன்றாகும் ஒருவேளை இது துக்கத்தின் உருவகமாக இருக்கலாம். |
உமா தாமசு என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
பிட்டைபீடியா ஷா ஜோ ரிசாலோ பற்றிய ஒரு திட்டமாகும் இதில் ஷா அப்துல் லத்தீஃப் பித்தாயின் படைப்புகள் பற்றிய அனைத்து கலைப்படைப்புகள் தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் புத்தகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. |
இமாச்சலப் பிரதேசத்தின் இசையில் அப்பகுதியில் இருந்து பல வகையான நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கியுள்ளன அவற்றில் பல இசைக்கருவிகளின் துணையில்லாமல் பாடப்படுகின்றன. |
மாலா ராய் பிறப்பு 19 நவம்பர் 1957 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். |
அம்ரித்பால் சிங் சாந்து பிறப்பு 1993 பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் சீக்கியர் ஆவார். |
மொபிதா அகமது 19212008 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். |
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். |
ரேணுகா தேவி பர்கடாகி 1932 2017 என்பவர்அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். |
சுபா பால்சவர் கோடே ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
கால் துடுப்பாட்டம் என்பது 80 மற்றும் 120 அடி 24 மற்றும் 37 மீ ஆரம் கொண்ட ஒரு வட்ட மைதானத்தில் பதினொரு வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு வகை துடுப்பாட்டமாகும். |
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும்.கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. |
நாதிரா பப்பர் பிறப்பு ஜனவரி 20 1948 ஒரு இந்திய நாடக நடிகை இயக்குனர் மற்றும் ஹிந்தி திரைப்பட நடிகையும் ஆவார். |
பாவனா பால்சவர் பிறப்பு 21 அக்டோபர் 1975 ஒரு இந்திய திரைப்பட மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
அதிசய சப்பாத்தி அல்லது சப்பாத்தியில் இயேசு என்பது ஒரு சப்பாத்தி அல்லது சுமார் எட்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்ட தட்டையான புளிப்பில்லாத ரொட்டி தான். |
ஆர்யக்காரகனி என்றும் அழைக்கப்படும் ஆர்ய பூங்கனி இந்தியாவின் கேரளாவில் உள்ள வட மலபார் பகுதியில் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வம் ஆகும். |
எமிலியோ சாலா எலியோ சல்யா உக்ரேனியன் 30 ஏப்ரல் 1864 மிலனில் 10 ஜனவரி 1920 மிலனில் என்றும் அழைக்கப்படும் எமிலியோ சாலா இத்தாலியில் பிறந்த சிற்பி மற்றும் ஓவியர் ஆவார். |
கலாசி ஜாத்ரா அல்லது கைலாசி ஜாத்ரா என்பது இந்தியாவின் ஒடிசாவின் கோசல் பகுதியில் உள்ள பௌத் சுபர்னாபூர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் அனுசரிக்கப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் . |
கங்கம்மா யாத்திரை அல்லது ஜாத்ரா என்பது தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படும் கங்கா அல்லது கங்கம்மா என்று அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை நோக்கி வழிபாடும் ஒரு நாட்டுப்புற விழா ஆகும் ஆந்திரா ராயலசீமா கர்நாடகா மற்றும் பல்வேறு ஆந்திர கிராம பகுதிகளில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. |
இலா பால் சௌத்ரி 1908 9 மார்ச் 1975 என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சமூக சேவகரும் ஆவார். |
மகுந்தா பார்வதி சுப்ரம்மா ரெட்டி பிறப்பு 1947 என்பவர் பொதுவாக மகுந்தா பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறார். |
சுபாவதி பசுவான் என்பவர் சுபாவதி தேவி என்றும் அழைக்கப்படுகிறார். |
குர்பிரிந்தர் கவுர் பிரார் 12 ஆகத்து 1922 7 செப்டம்பர் 2013 என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். |
மாதா நிகால் கவுர் இறப்பு 29 செப்டம்பர் 1644 என்பவர் ஆனந்தி நிகாலோ மற்றும் பாசுசி என்றும் அழைக்கப்படும் மாதா நாட்டி என்று பிரபலமாக அறியப்பட்டவர் பாபா குர்தித்தாவின் மனைவி ஆவார். |
மன்யதா தத் பிறப்பு தில்நவாசு சேக் 22 சூலை 1978 மன்யதா என்று அழைக்கப்படுபவர் இந்தியத் தொழிலதிபர் முன்னாள் நடிகை மற்றும் சஞ்சய் தத் தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அலுவலர் ஆவார். |
தெம்பி தொடருந்து விபத்து கிரேக்கத்தில் தெசலி மாகாணத்தில் 2023 பிப்ரவரி 28 அன்று தெம்பி சமவெளிக்கு தெற்கே இவாஞ்சிலிஸ்மோஸ் கிராமத்திற்கு அருகில் ஏதன்ஸ் நகரத்திலிருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு 380 பயணியர்களுடன் சென்று கொண்டிருந்த பயணியர் தொடருந்து வண்டியும் அதே இருப்புப் பாதையில் எதிர் திசையிலிருந்து வந்த கொண்டிருந்த சரக்குத் தொடருந்து வண்டியுடன் மோதிய வேகத்தில் இரு வண்டிகளும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. |
மும்தாஜ் பேகம் பிறப்பு 1956 என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தை ஆவார். |
பட்டாளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். |
வாசில் வெர்கோவினெட்ஸ் வாசில் மைகோலயோவிச் வெர்கோவினெட்ஸ் 1880 1938 என்பவர் ஒரு உக்ரேனிய நடிகர் இசை நிகழ்ச்சி நடத்துனர் இசையமைப்பாளர் குரலிசை ஆசிரியர் பாலே நடன ஆசிரியர் நடன இயக்குனர் மற்றும் நடன இனவியலாளர் என பல்வேறு திறமை கொண்டவராவார் உக்ரேனிய பாரம்பரிய நடனங்கள் மற்றும் அதன் உத்திகளை பற்றி உக்ரேனின் பல்வேறு கிராமங்களில் ஆராய்ச்சி செய்து அதன் எழுத்துப்படிகளைப் பதிவு செய்துள்ளார். |
சாய் பரஞ்ச்பை பிறப்பு 19 மார்ச் 1938 ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். |
ஒலாவ் ஜோர்கன் ஹெக் இறப்புஆகஸ்ட் 26 2005 ஒரு நோர்வே நாட்டின் கடின பிடில் என்ற நாட்டுப்புற இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர் ஆவார். |
குரிட் கட்மேன் தன் மகனுடன் குரிட் கட்மேன் 2 மார்ச் 1897 27 மார்ச் 1987 ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும் நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார். |
புளியந்தோப்பு என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். |
ஜியோர்கோஸ் ப்ரோவியஸ் ஒரு கிரேக்க நடனக் கலைஞரும் நடிகரும் நடன இயக்குனரும் என பன்முக திறமை கொண்டவராவார் பிரபலமான கிரேக்க நாட்டுப்புற நடனமான சிர்தகியை மற்ற வகை கிரேக்க நடனங்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவரே. |
மாடக்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். |
1446 பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். |
சுலைகா சௌத்ரி இந்தியாவில் புது டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த நாடக இயக்குனர் மற்றும் ஒளி வடிவமைப்பாளர் ஆவார். |
சைமன் சிடோன் அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். |
238238 ராஜா தனது மகளுக்கு தங்க சிங்கத்தை கொண்டு வருகிறார் ஹென்றி ஜஸ்டிஸ் ஃபோர்டின் விளக்கப்படம் கோல்டன் லயன் தங்க சிங்கம் ஜெர்மன் வோம் கோல்ட்னென் லோவென் என்பது இத்தாலிய விசித்திரக் கதையாகும். |
ஜெ. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.